Sunday, March 11, 2018

ஓய்வூதியர்கள் குறைகளை எழுதி அனுப்பலாம்

Added : மார் 11, 2018 00:46

சென்னை:குறை தீர்க்கும் கூட்டத்திற்கு, ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை எழுதி அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில், ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், ஏப்., 10ல் நடக்கிறது.இதில், சென்னையைச் சேர்ந்த, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருப்பின், எழுதி அனுப்பலாம்.
மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62, ராஜாஜி சாலை, சென்னை- - 1 என்ற முகவரிக்கு, 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024