Saturday, March 17, 2018

முதுநிலை மருத்துவம் படிக்க விண்ணப்பம் வினியோகம்

Added : மார் 17, 2018 01:26

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, விண்ணப்பம் வினியோகம் நேற்று துவங்கியது.தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவப் படிப்புகளான, எம்.டி., --- எம்.எஸ்., - 1,250; டிப்ளமா - 396 என, 1,646 இடங்கள் உள்ளன. இதில், மத்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீதம்; மாநில ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பம் வினியோகம், நேற்று துவங்கியது. விண்ணப்பங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கும், மருத்துவ கல்வி இயக்ககமே, மாணவர் சேர்க்கை நடத்துகிறது. எனவே, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்களும், இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்

.விண்ணப்பங்களை, வரும், 23ம் தேதி மாலை, 5:00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் செயல்படும், தேர்வு குழு கமிட்டியிடம், வரும், 26 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இதுகுறித்து, தேர்வுக்குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, அரசு ஒதுக்கீடு இடங்கள், இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.''முழுமையான இடங்கள் கிடைத்த பின் அறிவிக்கப்படும். தரவரிசை பட்டியல், ஏப்., 9ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்அறிவிக்கப்படும்,'' என்றார்.

அரசு டாக்டர்களுக்கு சலுகை : முதுநிலை மருத்துவப் படிப்பில், கடினமான மற்றும் தொலைதுார பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 10 முதல், 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024