Friday, March 23, 2018

பணிக்கொடை மசோதாநிறைவேறியது

Added : மார் 22, 2018 21:51

புதுடில்லி,: பணிக்கொடைக்கான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்தும் மசோதா, பார்லிமென்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது.ஒரு நிறுவனத்தில், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வெளியேறும் ஊழியருக்கு, அவரது அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு, பணிக்கொடை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கொடை தொகையின் வரி உச்ச வரம்பை, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தும் மசோதா, லோக்சபாவில்
சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், பணிக்கொடை மசோதாவை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சந்தோஷ் குமார் கங்குவார், நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

விவாதம் எதுவுமின்றி, இதன் மீது குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா நிறைவேறியது. பெண்களுக்கான பிரசவகால விடுமுறையை, 12 வாரத்தில் இருந்து, 26 வாரங்களாக

உயர்த்தவும், இந்த மசோதா வழிவகை செய்து உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TO DAY 31.10.2024