Sunday, March 25, 2018

தஞ்சை கோவிலை சுற்றி அமைக்கிறது புல் தளம்

Added : மார் 25, 2018 00:25



தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரிய கோவிலை சுற்றியுள்ள வளாகத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில், மைசூர் புல் தளம் அமைக்கப்பட உள்ளது.தஞ்சை, பெரிய கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் தோட்டம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதியில், புல் தளத்தை, தொல்பொருள் துறையின் கீழ் உள்ள, தோட்டக்கலையினர், பராமரித்து வருகின்றனர்.இதற்கான தலைமை அலுவலகம், மைசூர் அடுத்த ஸ்ரீரங்கப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை, பழைய புல்வெளியை அகற்றி, புதிய புல்வெளி அமைக்க வேண்டும்.தலைமை அலுவலகத்திலிருந்து அதற்கான உத்தரவு வராததால், 16 ஆண்டுகளுக்கு பின், தற்போது, 25 லட்சம் ரூபாய் செலவில், புதிய புல் தளம் அமைக்கப்பட உள்ளது.இதற்காக, பழைய புல்வெளிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில், அந்த பணி முடிந்தவுடன், மைசூர் புல் தளம் பதிக்கும் பணி துவங்கும்.இதற்கான புல்கள், மைசூர் அடுத்த ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள, திப்புசுல்தான் அரண்மனை அருகிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு, ரயில் மூலம் கொண்டு வரப்படுகிறது.


t

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024