Tuesday, March 13, 2018

நவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம்! பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு 

சுகன்யா பழனிச்சாமி

இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பயணங்களுக்கு, தனித்தனியாக விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் போயிங் 777-330 இ.ஆர் என்ற இரண்டு விமானங்களை வாங்கியுள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணத்திற்காக இந்த விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானத்தில், வைஃபை வசதிகளுடன் கூடிய விஐபி-கள் தங்கும் ஓய்வு அறை, மருத்துவ சிகிச்சை அறை, செய்தியாளர்களைச் சந்திக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்குமுன், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்கள் போயிங் 747 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வந்தனர். இந்த விமானத்தை விட 777-330 விமானம் தொழில்நுட்பத்தில் மிகவும் நவீனத்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த விமானத்தில் எந்த இடையூறும் இல்லாமல் பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கான அதிக அளவில் எரிபொருள் நிரப்பும் வசதிகளும் உள்ளன.

இத்தகைய, நவீன வசதிகள் நிறைந்த விமானத்தைச் சொந்தமாக வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரும் நிதி ஆண்டில் ரூ.4,469.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த வகை விமானத்தில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆகியோர் மட்டுமே பயணிக்க முடியும்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...