Friday, March 16, 2018

வினாத்தாள், 'லீக்' சி.பி.எஸ்.இ., விளக்கம்

Added : மார் 16, 2018 01:51

புதுடில்லி:சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும், பிளஸ் ௨ பொதுத் தேர்வு, நடந்து வருகிறது. கணக்குப் பதிவியல் பாடத்துக்கான தேர்வு நேற்று நடந்தது.இந்நிலையில், தேர்வுக்கு முன், இதன் வினாத்தாள் வெளியானதாக, தனக்கு புகார்கள் வந்ததாக, டில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான, சிசோடியா நேற்று தெரிவித்தார்.

இதற்கு, சி.பி.எஸ்.இ., தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், வினாத்தாள் அனைத்தும், தேர்வு மையங்களில், 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பாக இருப்பதாகவும், அவை தேர்வுக்கு முன் வெளியானதாக, சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024