என்.சி.சி., மாணவர் விபரங்கள் சேகரிக்கும் பிரதமர் அலுவலகம்
24.03.2018 dinamalar
புதுடில்லி:ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், என்.சி.சி., எனப்படும், தேசிய மாணவர் படையில் சேர்ந்துள்ள, 15 லட்சம் மாணவர்களின், மொபைல் எண்கள் மற்றும் இ - மெயில் முகவரிகளை சேகரிக்கும்படி, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தன்னார்வ இளைஞர் அமைப்பான, என்.சி.சி., 1948ல் துவங்கப்பட்டது.
இதில், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும், 15 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.என்.சி.சி., பொது இயக்குனர், பி.எஸ்.ஷெராவத்தை சந்தித்த, பிரதமர் நரேந்திர மோடி, என்.சி.சி., மாணவர்களுடன் உரையாட விரும்புவதாகக் கூறியுள்ளார்.
கடந்த மாதம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பு வதற்காக, என்.சி.சி., மாணவர்களின் மொபைல் எண்கள், இ - மெயில் முகவரி உள்ளிட்ட விபரங் களை சேகரிக்கும்படி, மாநில இயக்குனர கங்களுக்கு, ஷெராவத் கடிதம் அனுப்பினார். இந் நிலையில், என்.சி.சி.,யில் இணைந்துள்ள கல்லுாரி மாணவர்களின் விபரங்களை தனியாகசேகரிக்கும் படி, மாநில இயக்குனரகங்களுக்கு, என்.சி.சி., தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
எதற்காக, மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப் படுகின்றன; பிரதமர் எவ்வாறு மாணவர்களுடன் உரையாடுவார் என்பது குறித்த தகவல் குறித்து, மாணவர்களுக்கு இதுவரை அறிவுறுத் தப்படவில்லை.இதுவரை, 80 சதவீத மாணவர் களின் மொபைல் எண்கள் மற்றும் இ - மெயில் முகவரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக, என்.சி.சி., அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment