Sunday, March 25, 2018

தேசிய செய்திகள்

‘மனைவி சண்டை போடுவது, சமையல் செய்யாதது சித்ரவதை அல்ல’ ஐகோர்ட்டு கருத்து

DAILY THANTHI




மனைவி சண்டை போடுவதையும், சமையல் செய்யாததையும் சித்ரவதையாக கருத முடியாது என விவாகரத்து வழக்கு ஒன்றில் மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. #HighCourt # DivorceCase

மார்ச் 25, 2018, 05:15 AM
மும்பை,

மும்பையை சேர்ந்த மனோகர் ஜாதவ் என்பவர் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாகவும், அவரது குழந்தைகளில் 2 பேருக்கு தான் தந்தை இல்லை எனவும் குற்றம்சாட்டி மும்பை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனைவி குடும்பத்தில் யாரையும் மதிக்காமல் சண்டை போட்டுக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவதோடு, சமையல் கூட செய்யாமல் தன்னை சித்ரவதை செய்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விசாரித்த குடும்ப நல கோர்ட்டு மனோகர் ஜாதவ் தனது மனைவி மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி அவருக்கு விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது.

இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் தனக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க கோரி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சாம்பாஜி ஷிண்டே மற்றும் சோபன் கவ்ஹானே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனோகர் ஜாதவின் மனுவில், அவரது மனைவி சித்ரவதை செய்ததாக கூறியிருப்பது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சமையல் செய்யாதது, சண்டை போடுவது உள்ளிட்டவை சித்ரவதையாக கருத முடியாது என அவர்கள் கூறினர்.

மேலும் இதுபோன்ற பொதுவான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சித்ரவதை செய்வதாக எடுத்துக் கொண்டு விவாகரத்து வழங்க முடியாது என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...