Wednesday, March 7, 2018

மிகப்பெரிய வைர வியாபாரியின் மகளை மணக்கிறார் முகேஷ் அம்பானியின் மகன்

Published : 05 Mar 2018 17:34 IST

பிடிஐமும்பை




தந்தை முகேஷ் அம்பானி, தாய் நீடா அம்பானியுடன் ஆகாஷ் அம்பானி : கோப்புப்படம்

நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

ஆகாஷ் அம்பானி தனது பள்ளித்தோழி ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மிகப்பெரிய வைர வியாபாரியான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு மொத்தம் 3 குழந்தைகள் இதில் மூத்தவர் ஆகாஷ் அம்பானி, இவருக்கு அடுத்தபடியாக ஈஷா என்ற இரட்டை சகோதரிகள் உள்ளனர்.

ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3 மகள்களில் இளையவர் ஸ்லோகா மேத்தா. வைர வியாபாரி நிரவ் மோடிக்கு மிகவும் நெருங்கிய சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும், மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரின் பள்ளிக் காலத்தில் இருந்தே இரு குடும்பத்தாருக்கும் நன்கு பழக்கம் என்பதால் இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தாவின் திருமண நிச்சயதார்த்தம் மிக விரைவிலும், திருமணம் டிசம்பர் மாதத்திலும் நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து முகேஷ் அம்பானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், “ இந்த மாதம் 24-ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. எங்களுக்கு இப்போது தான் தெரியும். ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள்” எனத் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

ஸ்லோகா மேத்தா அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயன்ஸில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தற்போது ரோஸி புளூ அறக்கட்டளை அமைப்பில் நிர்வாக இயக்குநராக ஸ்லோகா மேத்தா செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...