Thursday, September 6, 2018

குட்கா ஊழல்: குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது

Updated : செப் 06, 2018 13:40 | Added : செப் 06, 2018 11:14 |




சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதவராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

சோதனை

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா வீடுகள் உட்பட தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர், குட்கா வியாபாரி மாதவராவிடமிருந்து பணத்தை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தரகர்கள் 2 பேரையும் விசாரணைக்கு பிறகு டில்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து , குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். செந்தில்முருகன், பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர் அதிகாரிகளை கைது செய்தனர். குட்கா ஊழல் தொடர்பாக இன்று மட்டும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சீல் :

குட்கா ஊழல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சம்பத்தின் வீட்டில் சோதனைக்கு பிறகு சீல் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024