Thursday, September 6, 2018

ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்
Updated : செப் 06, 2018 13:42 | Added : செப் 06, 2018 12:05 |




புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவு செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

வழக்கு

ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

பரிந்துரை

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு முழு அதிகாரம் உண்டு. 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்.2016 ல் விடுதலை செய்ய்கோரி அளிக்கப்பட்ட மனு குறித்து கவர்னர் முடிவெடுக்கலாம் எனக்கூறி, மத்திய அரசின் மனுவை முடித்து வைத்தது.

வரவேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்!

27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!









No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024