Wednesday, September 12, 2018

டீசல் வாங்கினால், 'லேப் - டாப்' இலவசம்

Added : செப் 11, 2018 22:42






பர்வானி : 'மத்திய பிரதேச மாநிலத்தில், பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு, 'பைக், லேப் - டாப்' உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்' என, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

முடிவு :

மத்திய பிரதேசத்தில், பெட்ரோலுக்கு, 27 சதவீதமும்; டீசலுக்கு, 22 சதவீதமும், 'வாட்' வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் இங்கு, பெட்ரோல் லிட்டர், 86.60 ரூபாய்க்கும் டீசல், 76.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது, நேற்றைய விலை நிலவரம். இதன் காரணமாக, இங்குள்ள பெட்ரோல் பங்க்குகளில், லாரி மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள், பெட்ரோல், டீசல் போடுவதை தவிர்க்கின்றனர்.

இந்நிலையில், தங்களிடம் தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாங்கும், உள்ளூர் மற்றும் வெளிமாநில லாரி டிரைவர்களுக்கு, இலவச பரிசுகளை வழங்க, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: புதிய அறிவிப்பின்படி, 100 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கும் டிரைவருக்கு, காலை உணவும், டீயும் இலவசமாக வழங்கப்படும். 200 லிட்டர் வாங்கினால், டிரைவர் மற்றும் கிளீனருக்கு, காலை உணவு வழங்கப்படும்.

மேலும், 5,000 லிட்டர் வாங்கினால், மொபைல் போனுடன், சைக்கிள் அல்லது கை கடிகாரம் வழங்கப்படும். 15 ஆயிரம் லிட்டருக்கு மேல் வாங்கினால், பீரோ, சோபா செட் அல்லது 100 கிராம் வெள்ளி நாணயம் தரப்படும்.

ஆயிரம் லிட்டர் :

இதுதவிர, 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் வாங்கினால், வாஷிங் மிஷினும், 50,000 லிட்டர் வாங்கினால், 'ஏசி' அல்லது லேப் - டாப் வழங்குவோம். ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் வாங்கினால், ஒரு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். ஒரு முறை இலவச பரிசு பெற்றவர்கள், அடுத்த இலக்குக்கு செல்ல முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024