Wednesday, September 19, 2018

அரசு நடத்திய பேச்சில் சமரசம்: டாக்டர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

Added : செப் 18, 2018 22:45


சென்னை, அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம், நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 20 ஆயிரம் அரசு டாக்டர்கள், வரும், 21 காலை, 7:30 முதல், 22ம் தேதி காலை 7:30 மணி வரை வேலை நிறுத்தத்தில், ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.இதையடுத்து, அரசு டாக்டர்கள் சங்கத் தினருடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், தலைமை செயலகத்தில், நேற்று பேச்சு நடத்தினர். மதியம் 12:00 முதல் இரவு 8:15 மணி வரை நடத்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது.இதுகுறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது:எங்கள் கோரிக்கையை, குழு அமைத்து பரி சீலிப்பதாகவும், அதற்கு, நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும், அரசு தரப்பில் கோரினர். அரசு அமைக்கும் குழுவில், எங்கள் பிரதிநிதியையும் சேர்க்க கோரியுள்ளோம்.அரசின் உறுதியை ஏற்று, போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கா விட்டால், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...