Thursday, September 20, 2018

டாக்டர் சம்பளம் கமிட்டி அமைப்பு

Added : செப் 19, 2018 20:49

சென்னை, அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக ஆராய, சுகாதாரத்துறை கூடுதல் செயலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும், 20 ஆயிரம் டாக்டர்கள், ஊதிய உயர்வு கோரி, வரும், 21ம் தேதி, 'ஸ்டிரைக்' அறிவித்திருந்தனர். இதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அரசு டாக்டர்களுடன் பேச்சு நடத்தினர். 'ஊதிய உயர்வு குறித்து, நான்கு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், ஊதிய உயர்வு குறித்து ஆராய, சுகாதாரத் துறை கூடுதல் செயலர், நாகராஜன் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 'இந்த கமிட்டி, அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். 'இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு குறித்து, அரசு முடிவு செய்யும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024