Thursday, September 20, 2018

நர்சிங் படிப்புக்கும் 'நீட்' மத்திய அரசு கடிதம்

Added : செப் 19, 2018 22:35

சென்னை, பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு 'நீட்' தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசிடம் கருத்து கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' நுழைவு தேர்வு கட்டாயமாகி உள்ளது. பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும், நீட் தேர்வு நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசுகடிதம் அனுப்பியுள்ளது.இதுகுறித்து தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் கூறுகையில், 'பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, நீட் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024