Friday, September 21, 2018

கோவை கல்லூரி அதிபர், 'செக்ஸ் டார்ச்சர்' பரவும் ரகசிய வீடியோ: புகார் கூறிய பெண் மாயம்

Added : செப் 20, 2018 21:42

கோவை, கோவை, தனியார் கல்லுாரி தாளாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஊழியர், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திடீரென மாயமானார். தாளாளரின் பாலியல் சீண்டல், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள தனியார் கல்லுாரியின் தாளாளர், தன் கல்லுாரியில் பணியாற்றும் பெண் ஊழியரை முத்தமிடும் வீடியோ காட்சிகள், நேற்று முன்தினம், சமூக வலைதளங்களில் பரவியது.அதில், தாளாளர், தன் அலுவலக அறையில் ஒருவித பரபரப்புடன் நடமாடுகிறார். அடுத்த சில விநாடிகளில், கல்லுாரி ஊழியரான இளம்பெண் ஒருவர் உள்ளே நுழைகிறார். கைநீட்டி அருகில் அழைக்கும் தாளாளர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சுவற்றோரம் தள்ளி, கட்டிஅணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு, சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். சற்று போராடியது போல, மறுப்பு தெரிவித்த அந்த பெண், அவரை விலக்கி விட்டு, வெளியேறுகிறார்.

இதேபோன்ற மற்றொரு காட்சி, மற்றொரு நாளில் நடந்தது போன்று, வெவ்வேறு உடைகளில் அந்த பெண் வந்து போகிறார். இவ்வாறு, மூன்று வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின.இதற்கிடையே, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த இளம்பெண், நேற்று முன்தினம், துடியலுார் பெண் போலீசில் புகார் அளித்தார்.அவரிடம் போலீசார், ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், வீட்டிற்குச் செல்ல நேரமாகி விட்டதாகக் கூறி அப்பெண், அங்கிருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.துடியலுார், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை கூறியதாவது:புகார் அளிக்க வந்த பெண்ணிடம் விசாரித்தோம். பாலியல் ரீதியிலான புகார் என்பதால், நேரடியாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடிவு செய்தோம்.ஆனால், அந்த பெண், தன் பெற்றோரிடம் கலந்தாலோசித்து வருவதாக சொல்லி, புகார் மனுவை திரும்ப பெற்று சென்றுவிட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.புகாரில் சிக்கியுள்ள கல்லுாரி தாளாளரின் மகன் கூறியதாவது:எங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக, சிலர் செயல்படுகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவிற்கும், எங்கள் கல்லுாரிக்கும், எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024