Added : செப் 22, 2018 01:20
ஸ்ரீவில்லிபுத்துார்:புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு மிக்கது. அதிலும் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசபெருமாளை தரிசிப்பது என்பது அதனினும் சிறப்பு.
புரட்டாசி மாதத்தில் பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் தரிசிப்பது வாழ்வின் பெரும்சிறப்பு. மாதங்களில் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் தான் பிரம்மோத்ஸவ விழா 108 திவ்யதேசங்களில் வெகுசிறப்புடன் நடக்கிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து பெருமாளை வணங்கினால் வாழ்வில் வளம் பெருகும். உடல் நலன் மேம்படும். வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
இத்தகைய சிறப்பு மிக்க புரட்டாசி சனி உற்சவங்கள் இன்று துவங்குகிறது. அதிலும் தென்திருப்பதி என்றழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாளை படியேறி பக்தியுடன் தரிசித்தால் வாழ்வில் மேலும் நன்மைகள் உண்டாகும். அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள், ஐந்து சனிக்கிழமைகள் தோறும் பெருமாளை தரிசிக்க படியேறி வருகின்றனர்.
அதிலும் அதிகாலையில் நடை திறந்தவுடன் பெருமாளின் திவ்யதரிசனம் காண்பதற்கு, அளவில்லா பக்தியுடனும், ஆனந்த மகிழ்வுடனும், கோவிந்தா, கோபாலா கோஷத்துடனும் தரிசிப்பது பக்தியின் உயர்ந்த மாண்பை வெளிப்படுத்துகிறது.பெருமாளை சில நிமிடம் தரிசித்தாலே வாழ்வின் பெருவளங்கள் பெறலாம்.
No comments:
Post a Comment