Saturday, September 22, 2018

கூரியர் நிறுவனம் சேவை குறைபாடு இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

Added : செப் 22, 2018 00:54


கோவை:சேவை குறைபாடு செய்த கூரியர் நிறுவனம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை, ராமநாதபுரம், திருச்சி ரோட்டை சேர்ந்த வக்கீல் முத்துவிஜயன், பங்கஜா மில் ரோட்டில் உள்ள, 'புரொபஷனல்' கூரியர் மூலமாக, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கு, 2014, ஜூலை, 25ல் தபால் அனுப்பினார். குறிப்பிட்டதேதியில் கடிதம் சென்றடையவில்லை. கூரியர் நிறுவனத்தினர், 28ம் தேதிக்குள் கிடைத்து விடும் என்றனர். அந்த தேதியிலும் கூரியர் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட முத்துவிஜயன், கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.ஜேக்கப் என்பவருக்கு கூரியர் கிடைக்காததால்,சென்னையில் நடக்க இருந்த நேர்முக தேர்வில், அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், 'கூரியர் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனுதாரருக்குஇழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு தொகை 2,500 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024