Friday, September 21, 2018

சிறப்புக் கட்டுரைகள்

மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, ஜியோமி நிறுவனம்




ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவின் ஜியோமி நிறுவனம் கடந்த வாரம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 19, 2018 13:02 PM

‘ரெட் மி 6’, ‘ரெட் மி 6 ஏ’ மற்றும் ‘ரெட் மி 6 புரோ’ என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டிருப்பதோடு வெவ்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற விலையிலும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட் மி 6

‘ரெட் மி 6’ ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா மற்றும் ஆக்டோ கோர் புராஸெசர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 12 என்.எம். செயலி இருப்பதால் இது 48 சதவீதம் குறைவான சக்தியைப் பயன்படுத்துகிறது. இதன் தொடு திரை 5.45 அங்குலம் கொண்டது. இதன் மேல் பாகம் பாலி கார்பனேட்டால் ஆனது. இதன் பின்பகுதியில் 12 மெகாபிக்செல் மற்றும் 5 மெகாபிக்செல் திறன் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. இதனால் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும். இதன் முன்பகுதியில் உள்ள 5 மெகா பிக்செல் கேமரா செல்பி பிரியர்களுக்கு வரப்பிரசாதமாகும்.





இது இரண்டு வகைகளில் வருகிறது. முதல் இரண்டு மாதங்களுக்கு அறிமுக விலையாக 3 ஜி.பி.ரேம் மற்றும் 32 ஜி.பி. உள்நினைவகம் கொண்ட மாடல் ரூ.8 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. அதேசயம் 3 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. உள்நினைவக மாடல் ரூ. 9,499 ஆகவும் இது விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட் மி 6 ஏ

‘ரெட் மி 6 ஏ’ மாடல் 5.45 அங்குல தொடு திரை கொண்டது. இதன் விலை ரூ. 5,999 ஆகும். இதில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதில் 13 மெகா பிக்செல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்செல் முன்புற கேமரா உள்ளது.




இதில் முகத்தை அடையாளம் கண்டு திறக்கும் ‘பேஸ் அன்லாக் சிஸ்டம்’ உள்ளது. இதில் இரண்டு சிம் ஸ்லாட்கள் உள்ளன. இது தவிர மைக்ரோ எஸ்.டி. கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. இதில் மற்றொரு மாடலின் விலை ரூ. 6,999. இதில் 2 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. திறன் கொண்டது.

ரெட் மி 6 புரோ

‘ரெட் மி 6 புரோ’ இது ஸ்டைலான வடிவமைப்போடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோகோர் செயலியுடன் வந்துள்ளது. இதில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பது சிறப்பம்சமாகும். இதன் பேட்டரி இரண்டு நாள் வரை செயல்படும்.





பின்பகுதியில் 12 மெகா பிக்செல் மற்றும் 5 மெகாபிக்செல் ஏஐ (கிமி) கேமரா உள்ளது. உலோக வடிவமைப்பு இதற்கு ஸ்டைலான தோற்றப் பொலிவை அளிக் கிறது.

3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. உள்நினைவகம் மற்றும் 4 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. உள்நினைவகம் என இரு மாடல்களில் இது வந்துள்ளது. 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 10,999-க்கும் மற்றும் 4 ஜி.பி.ரேம் மாடல் ரூ.13 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.

சலுகை

இந்த போன்களை பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வாங்க முடியும். ஹெச்.டி.எப்.சி. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு ரூ.500 ‘கேஷ் பேக்’ சலுகையும் அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...