ஜியோவுக்குப் போட்டியாக ரூ.419 திட்டத்தை அறிவித்தது ஏர்டெல்
Published : 18 Sep 2018 17:53 IST
பார்தி ஏர்டெல். - படம். | ராய்ட்டர்ஸ்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.399 திட்டத்துக்கு போட்டியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.419 ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் ரூ.419 திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் ரோமிங் அழைப்புகள், தினமும் 100 குறுஞ்செய்திகள் ஆகியவற்றை இலவசமாகப் பெறமுடியும்.
உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகளை ஒரு நாளைக்கு 300 நிமிடங்களும் ஒரு வாரத்துக்கு 1000 நிமிடங்களும் பயன்படுத்தலாம். அத்துடன் ஏர்டெல் டிவி செயலியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் பயனர்கள் தினந்தோறும் 4ஜி வேகத்தில் 1.4ஜிபி டேட்டாவையும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத இலவச அழைப்புகளையும் (free voice call) பெறுவர். இதன் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும்.
இது ஜியோவின் ரூ.399 திட்டத்துக்கு போட்டியான திட்டமாகப் பார்க்கப்படுகிறது. ஜியோவில் 84 நாட்கள் வேலிடிட்டியும், நாள்தோறும் 4ஜி வேகத்தில் 1.5 ஜிபி இலவச டேட்டாவும், இலவச அழைப்பு செய்யும் வசதியும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment