வருமான வரி செலுத்துவோர் கவனத்துக்கு...
By DIN | Published on : 19th September 2018 02:11 AM
வரியைத் திரும்பப் பெற வங்கி விவரங்களைக் கேட்கும் போலி மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை வரி செலுத்துவோர், பொதுமக்கள் நம்ப வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரி செலுத்துவோர் தங்கள் வரியைத் திரும்பப் பெறுவதற்காக வங்கி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் தகவல் அனுப்பப்படுவதாக வருமான வரித் துறை கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எந்தவிதமான மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளை வருமான வரித் துறை அனுப்புவதில்லை. மேலும் வருமான வரித்துறை மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் பாஸ்வேர்டு (கடவுச்சொல்), வங்கி விவரங்கள் போன்றவற்றைக் கேட்பதில்லை. அத்துடன் வரி செலுத்துவோர் தங்களின் முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற சுயவிவரங்களை வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment