Friday, September 7, 2018

தெரு விளக்கு இல்லாததால் சேலையூர், அகரம்தென் சாலையில் விபத்து, வழிப்பறிகள் அதிகரிப்பு

தெரு விளக்கு இல்லாததால் சேலையூர், அகரம்தென் சாலையில் விபத்து, வழிப்பறிகள் அதிகரிப்பு

தாம்பரம்:  சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்-அகரம்தென் பிரதான சாலையில் ஏராளமான தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பிரதான சாலையை பயன்படுத்தி சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் இருந்து மப்பேடு, பதுவஞ்சேரி, திருவஞ்சேரி, அகரம்தென், வெங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை.

இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன.
சேலையூர்-அகரம்தென் பிரதான சாலையில் மின்விளக்குகளை பொருத்தி, சாலை விபத்து மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும்.
அங்குள்ள சாலையோர மதுபான பார்களையும் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024