Monday, September 24, 2018

Posted Date : 13:40 (24/09/2018)Last updated : 13:40 (24/09/2018)

`நான் செஞ்ச சேவைக்கு மரியாதை கிடைச்சிருக்கு!'‍- டாக்டர் பட்டம் பெற்ற ஆலங்குடி கணேசன் நெகிழ்ச்சி

இரா.செந்தில் குமார்

அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் போல, இலவச கார் சேவை செய்துவருபவர், ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன் என்னும் 70 வயது முதியவர். இன்று நேற்றல்ல, கடந்த 46 வருடங்களாக இந்தச் சேவையை அவர் செய்துவருகிறார். ஆலங்குடி மட்டுமல்ல புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 515 கணேசனைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. நம் விகடனில்கூட இவரின் சேவையைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம்.

பிரசவம், அவசர சிகிச்சையா உடனே 515 கணேசனுக்குப் போன் வந்துவிடும். எந்தவித கட்டணமும் இல்லாமல், தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்துகொண்டிருக்கிறார். இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்பிணிகளுக்கும், விபத்துக்குள்ளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் உதவியிருக்கிறார் கணேசன். அதுமட்டுமல்ல, இறந்த சடலங்களைத் தங்களின் இருப்பிடங்களுக்கு எடுத்துச்செல்ல கஷ்டப்படுபவர்களுக்கும் உதவிவருகிறார். அப்படி, இதுவரை 5000-க்கும் மேற்பட்ட சடலங்களைக் கொண்டுசெல்வதற்கு உதவியிருக்கிறார்.




அவரின் இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, பெங்களூரிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம், சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ``இத்தனை நாள் செஞ்ச சேவைக்கு ஒரு மரியாதை கிடைச்சிருக்கு. நெறையப் பேரு போன் பண்ணி வாழ்த்துறாங்க. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன் " நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் 515 கணேசன்.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...