சர்ச்சை பேச்சு: கருணாஸ் கைது
Updated : செப் 23, 2018 07:28 | Added : செப் 23, 2018 05:57
சென்னை : தமிழக முதல்வரையும், போலீசாரையும் தரக்குறைவாக பேசியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் நடிகர் கருணாசை இன்று (23 ம் தேதி) காலையில் கைது செய்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசுகையில்; முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுகிறார். இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்தேன் என கருணாஸ் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரியிடமும், யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்ற சவாலும் விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, கலவரத்தை தூண்டுதல் மற்றும் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே, சாலிகிராமம் வீட்டில் இருந்த கருணாசை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர்.
சட்டப்படி சந்திப்னே் : கருணாஸ்
முன்னதாக அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் வேனில் ஏற்றும் முன்பு நிருபர்களிடம் பேசிய கருணாஸ் :
என்னை கைது செய்ய சபாநாயகர் அனுமதி பெற்றார்களா என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் சிறை செல்லவே பிறந்தவர்கள். சீவலப்பேரி பாண்டி வழி வந்தவர்கள். பேச்சுரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி சந்திப்பேன். என்றார்.
No comments:
Post a Comment