Sunday, November 18, 2018

மாற்றம்!  18.11.2018

21 ஆண்டுக்கு பின், எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டம்...; 
அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை


புதுடில்லி:  மருத்துவ படிப்புக்கான பாடத் திட்டத்தை, 21 ஆண்டுகளுக்குப் பின் மாற்றி அமைத்து, எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளி களின் உடலில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கம் மட்டுமின்றி, அவர்களின் மன நிலையையும் அறிந்து, டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக, எம்.சி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, அதன் செயல்பாட்டை கவனித்து, வழி நடத்துவது உள்ளிட்ட பணி களை, எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொள்கிறது. மருத் துவ மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வரையறுப்பதும், எம்.சி.ஐ.,யின் பிரதான பணிகளில் ஒன்றாக உள்ளது. இந் நிலையில், மருத்துவ இளநிலை பட்டப்படிப் பான, எம்.பி. பி.எஸ்.,பாடதிட்டம், கடைசியாக, 1997ல் மாற்றி அமைக்கப்பட்டது.

அப்போது, புதிய நோய்கள் மற்றும் அதை கண்டறியும் முறைகள், அதற்கான மருத்துவம் குறித்த அம்சங்கள், பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டன.தற்போது, 21 ஆண்டுகளுக்குப் பின், எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மருத்துவம் படிக்கும் மாணவர்கள், வெறும் நோய் மற்றும் அதற்கான மருத்துவம் பற்றி மட்டும் படிக்காமல், நோயாளிகளை புரிந்து,

அவர்களின் மன நிலை அறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.அதே போல், நோயாளிகளிடம் எளிதாக கலந்துரையாடும் வகையில், மருத்துவ மாணவர்களுக்கு, 'சாப்ட் ஸ்கில்' எனப்படும் மென்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் பேசி, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இது குறித்து, எம்.சி.ஐ., ஆட்சிமன்ற குழு தலைவர், வி.கே.பவுல், டில்லியில், செய்தி யாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான சமுதா யத்திற்கு, டாக்டர்களின் பங்களிப்பு முக்கியம். அந்த வகையில், காலத்திற்கு ஏற்ப, எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், கடைசியாக, 1997ல் பாடத்திட்ட மாற்றம் அமல்படுத்தப்பட்டது. 21 ஆண்டுகளாக, அதே பாடத்திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டு முதல், புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்டர்கள், நோயை குணப்படுத்துவோராக மட்டு மின்றி, நோயாளி களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோராகவும் செயல்பட வேண்டும். டாக்டர்கள் தொழில் தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இதற்காக, எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர் களுக்கு நெறிமுறைகள் குறித்த பாடம் கற்பிக்கப் படும். நோயாளிகளுடன் இனிமையாக பழகுதல், அவர்களுடையபிரச்னைகளை கேட்டறிதல், அவர்களின் மன நிலை அறிந்து சிகிச்சை அளித்தல் குறித்தும், மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் .டாக்டர்கள் நோயை குணப் படுத்துவதுடன், நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டும். அதற்காக, மாணவர்களுக்கு மனநல சிகிச்சை குறித்தும் பாடம் நடத்தப்படும். எம்.பி.பி.எஸ்., முடித்து டாக்டர்களாக பணியாற்றும் போது, நோயாளிகளுடனும், அவர்களின்

உறவினர்களுடனும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும், இந்த பாடத் திட்டத்தில் உள்ளது.

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தி, அதை, நோயாளி கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் ஏற்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய அமைப்பு!எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில், 1934ல் துவங்கப் பட்டது. நாடு முழுவதும், ஒரே தரத்திலான மருத்துவ கல்வியை வழங்கவும், அதை கண் காணிக்கவும், இந்த அமைப்பு துவங்கப்பட்டது.

மருத்துவ படிப்புகள் மற்றும் கல்லுாரிகளுக் கான அங்கீகாரம் வழங்குதல், அவற்றின் செயல்பாட்டை கண்காணித்தல் போன்ற பணிகளை, எம்.சி.ஐ., மேற்கொள்கிறது.இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1933ன் கீழ் இந்த அமைப்பு செயல்பட துவங்கியது. அதன் பின், 1956,1964 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில், இந்த சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. நாட் டில், மருத்துவ படிப்புகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளின் செயல்பாட்டை கண்காணிப் பதில், எம்.சி.ஐ., முக்கிய பங்காற்றுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024