புயல் நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி தேவை
dinamalar 23.11.2018
'கஜா புயல் நிவாரண பணிகளுக்காக, தற்காலிக ஒதுக்கீடாக, 1,500 கோடி ரூபாயும், நிரந்தர ஒதுக்கீடாக, 15 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக் கீடு செய்ய, மத்திய அரசு முன்வர வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப் புக்கு நிவாரண நிதி கேட்டு, நேற்று டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் நீடித்தது.இந்த சந்திப்பின் போது, தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட, உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, பிரதமரிடம், புயல் பாதிப்புகள் அடங்கிய இடைக்கால அறிக்கை யுடன் கூடிய, கோரிக்கை மனு அளிக்கப்பட்டதுஇதன் பின், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய, முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
கஜா புயல் பாதிப்புகள் குறித்து, பிரதமரிடம் விரிவாக விவரிக்கப்பட்டது. புயல் சேத பாதிப் புகளை கணக்கில் வைத்து, தற்காலிக நிவாரண ஒதுக்கீடாக, 1,500 கோடி ரூபாயும், நிரந்தர ஒதுக்கீடாக,ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, வலியுறுத்தினேன்.
புயல் பாதிப்புகளை கணக்கீடு செய்வதற்கு, மத்திய அரசின் நிபுணர் குழுவை, தமிழகத்துக்கு உடனடி யாக அனுப்பி வைப்பதாக, பிரதமர் உறுதியளித்தார்.
கஜா புயலால், 63 பேர் பலியாகிஉள்ளனர்; ஆயிரக் கணக்கானோர் வீடிழந்துள்ளனர்.மொத்தம், 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே,மத்திய அரசின் நிவாரண நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.நிவாரண நடவடிக்கைகள் அனைத்துமே, துறை ரீதியாக பிரிக்கப்பட்டு நடக் கின்றன. ஒவ்வொரு மட்டங்களிலும், அமைச்சர்கள் முகாமிட்டு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து இடங்களுக்கும் சென்று, முழுமையான ஆய்வு நடத்திய பின், புயல் பாதிப்புகள் குறித்த மொத்த சேத விபரங்களும் தெரிய வரும். பாதிக் கப்பட்ட பகுதிகள் அனைத்துக்கும், நேரில் சென்று பார்வையிட உள்ளேன்.'சாலை மார்க்கமாக செல்ல வில்லை' என்ற குற்றச்சாட்டை ஏற்க இயலாது.
இந்த குற்றச்சாட்டை வைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் கூட, எத்தனை ஊர்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் என்பதை, அனைவரும் அறிவர்.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட புயல் நிவாரண நிதியை விட, தற்போது அதிகமாகவே நிதி வழங்கப்படுகிறது. புயல் அபாயம் என்றதும், பல இடங்களில் முகாம்களை அமைத்து, லட்சக் கணக்கான உயிர்களை தமிழக அரசு காப்பாற்றி உள்ளது.இரண்டு முறை, தலைமை செயலகத்தில், என் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.
எனவே, இந்த விஷயத்தில், தமிழக அரசை, தி.மு.க., வேண்டும் என்றே குறை கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக அரசு ஊழியர்களும், மின் துறை ஊழியர்களும் மேற்கொண்டு வரும் புயல் நிவாரண மீட்பு
நடவடிக்கைகள், மிகவும் பாராட்டுக்குரியவை. இவ்வாறு முதல்வர் கூறினார்.
மத்திய குழு 3 நாட்கள் ஆய்வு
முதல்வர் பழனிசாமி, டில்லி பயணத்தை முடித்து, நேற்று மாலை, சென்னை புறப் பட்டார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:பிரதமரிடம் கோரிக்கை விடுத்த, அடுத்த சில மணி நேரங்களிலேயே, புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, மத்திய குழுவை அனுப்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய குழுவினர், நாளை மாலை, டில்லியில் இருந்து புறப்பட்டு, தமிழகத்துக்கு வருவர். அடுத்த மூன்று நாட்களுக்கு, இந்த குழு, பாதிக் கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தும். அ.தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை, புயல் நிவாரண நிதிக்காக தர சம்மதித்துள்ளனர்.புயல் பாதித்த பகுதிகளில், கவர்னர் ஆய்வு நடத்துவதில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர், தனியாக ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்து, மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தந்தால், மகிழ்ச்சியே.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
No comments:
Post a Comment