Sunday, November 25, 2018


சித்தா, 1,235    இடங்கள் நிரம்பின

Added : நவ 25, 2018 01:50

சென்னை, 

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா படிப்புகளுக்கு, 1,235 இடங்கள் நிரம்பின.சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,482 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நவ., 19ல் துவங்கியது. நேற்று நிரம்பிய, 183 இடங்களுடன், இதுவரை, 1,235 இடங்கள் நிரம்பியுள்ளன.இதுகுறித்து, தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 247 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இந்த இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், www.tnhealth.org என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

IMA writes to doctor MPs and MLAs to oppose ‘mixopathy’

IMA writes to doctor MPs and MLAs to oppose ‘mixopathy’  TIMES NEWS NETWORK 01.01.2025 Ahmedabad : The Gujarat State Branch of the Indian Me...