Saturday, November 24, 2018

மெரினா போறீங்களா? ஜாக்கிரதை!

Added : நவ 24, 2018 00:17





மெரினா : மெரினா கடற்கரையோரம் முழுவதும், ஒரு விதமான ரசாயன நுரை பரவி இருந்ததால், சுற்றுலா பயணியர் பெரும்பாலானோர், கடலில் கால் நனைக்க தயங்கினர்.

சென்னை, மெரினா கடற்கரையில், நேற்று மதியம் முதல், அலையிலிருந்து ஒரு விதமான ரசாயன நுரை வெளியேறி, கடற்கரை முழுவதும் பரவி இருந்தது.இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணியர், கடலில் கால் நனைக்காமலும், நீராடாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து, ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் கடலில் கலக்க விடுகின்றனர்.பெரும் மழை, புயல் காலங்களில், அவை கரைக்கு நுரையாக அடித்து வரப்படுகின்றன. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், அலட்சியமாக செயல்பட்டு வருவதால், கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.

இதற்கு முன், இதே போன்று, 2015ம் ஆண்டு கனமழையின் போது, கடற்கரையோரம் முழுவதும் நுரையாக காணப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, மீனவர் சங்க நிர்வாகி, நாஞ்சில் ரவி கூறியதாவது: கடல்நீர் இயல்பாகவே அடர்த்தி அதிகமானது. மழைக்காலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுகளுடன் கலந்து, மழைநீரும் கடலில் சேர்கிறது.அப்போது, ஆக்சிஜன் அளவு குறையும். இச்சமயத்தில், கடலில் ஏற்படும் வேதி மாற்றங்களால், நுரை ஏற்படுவது வழக்கம்.இது, வழக்கமான ஒன்று தான். இந்த நிலை, ஓரிரு நாட்களில் மாறிவிடும். இதுகுறித்து, மக்கள் அச்சமடைய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Leopard spotted at Infosys Mysuru campus

Leopard spotted at Infosys Mysuru campus  EMPLOYEES TOLD TO WORK FROM HOME  TIMES NEWS NETWORK 01.01.2025 Mysuru : A leopard was sighted at ...