Tuesday, November 20, 2018

புயல் பாதிப்பு: நடிகர்கள் உதவி

Added : நவ 20, 2018 05:56


சென்னை: 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திரையுலகினர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில், 50 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பொருட்கள் வழங்க உள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.விரைவில் வெளியாக உள்ள, 2.0 படத்திற்கு, பேனர், போஸ்டர் போன்றவற்றுக்கு செலவழிக்கும் தொகையை, நிவாரண பொருட்களுக்கு செலவிட, ரஜினி ரசிகர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.நடிகர் விஜய்சேதுபதி, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மரக்கன்று உள்ளிட்ட உதவிப்பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், இரண்டு லாரிகளில், உதவிப் பொருட்களை, டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.நடிகர் நகுல், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் முடிந்தளவு உதவுங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார். இசையமைப்பாளர், டி.இமான், 'டுவிட்டரில்' கூறுகையில், 'டெல்டா மாவட்டத்திற்கு, வெறும் பிரார்த்தனை மட்டும் போதாது. உதவிக் கரமும் நீட்ட வேண்டும்' என, கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...