4 நாள் வேலைநிறுத்தம் அரசு டாக்டர்கள் அறிவிப்பு
Added : நவ 28, 2018 22:46
சென்னை :ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, நான்கு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, அரசு டாக்டர்களின் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துஉள்ளது.தமிழகத்தில், அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 20 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு கோரி, தமிழக அரசு டாக்டர்கள் போராடி வருகின்றனர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, செப்., 21ல், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.அப்போது, சுகாதாரத் துறை அதிகாரிகள், டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், ஊதிய உயர்வு தொடர்பாக, ஆய்வு செய்ய, கமிட்டி அமைத்தனர்.கமிட்டி வாயிலாக உரிய தீர்வு கிடைக்காத நிலையில், டிச., 4ல், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். புயல் காரணமாக, போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
அதற்கு பதிலாக, டிசம்பரில், நான்கு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில், ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:டிச., 4, 12 ஆகிய தேதிகளில், புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு; டிச., 13ல், அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.டிச., 27 முதல், 29ம் தேதி வரை, மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment