Friday, November 23, 2018

இந்தியாவில் வெளியானது ரெட்மி நோட் 6 ப்ரோ! முதல் விற்பனையில் ரூ.3500 தள்ளுபடி! மிஸ் பண்ணிடாதீங்க!!


கடந்த 4 வருடங்களுக்கு முன் இந்தியாவில் Mi3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது. அதிலிருந்து இன்று வரை அந்நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் அபரிவிதமாக இருக்கிறது. தற்போது இந்திய மக்கள் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் சியோமி நிறுவன மொபைலை பயன்படுத்துகின்றனர் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.



சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4 , ரெட்மி நோட் 5 , நோட் 5 ப்ரோ என தொடர்ந்து இந்தியாவில் மொபைலை வெளியிட்டு தன்னை நிலையாக நிலை நிறுத்தியது. இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவிற்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ - 4ஜிபி ரேம்/64ஜிபி வேரியண்ட் முதன்முதலாக தாய்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. தாய்லாந்தில் இந்த போனின் அறிமுக விலை டி.ஹெச்.பி 6,990 ஆகும். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.15,300 ஆகும்.

ரெட்மி நோட் 6 ப்ரோவின் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் ரெட்மி நோட் 6 ப்ரோவின் சிறப்பு அம்சம், விலை, முதல் விற்பனை எப்போது என்பது குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டது.

இரட்டை சிம் வசதி கொண்டதாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டது.

6.26 இன்ச் ஹெச்.டி + திரை 19:9 என்ற வீதத்தில் இருக்கும்.

கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

14nm அக்டோ- கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 SoC.

அட்ரினோ 509 GPU,

4ஜிபி/6ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் .

பின்புறம் இரண்டு கேமிராக்கள் உள்ளன.

4000mAh பேட்டரி.

விற்பனை தேதி: முதல் விற்பனை நாளை வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 12 மணிக்கு தொடங்குகிறது. பிளிப்கார்ட் மற்றும் mi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்த போனை வாங்கலாம்.

பிளிப்கார்ட் : https://www.flipkart.com

எம்ஐ : https://store.mi.com/in/buy/product/redmi-note-6-pro

இந்தியாவில் இரண்டு மாடல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ வெளியாகிறது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ.15,999 க்கும் மற்றும் 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 17,999 க்கும் விற்பனை செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும், நாளை முதல் விற்பனையை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாடலுக்கும் ரூ.3000 தள்ளுபடி  வழங்கியுள்ளது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் : ரூ. 12,999 | 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 14,999 க்கும் சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த சிறப்பு தள்ளுபடி நாளை மட்டுமே. நாளை சரியாக 12 மணிக்கு விற்பனை தொடங்கும் என்பதை நினைவில் கொள்க.

இது மட்டுமல்லாமல் HDFC டெபிட் அல்லது கிரிடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...