அரசு மருத்துவமனைகளில் பிறப்பு சான்று: டிச.1 முதல் அமல்
Added : நவ 28, 2018 22:21 |
கம்பம்: அரசு மருத்துவமனைகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க தனி அலுவலரை பொதுச்சுகாதாரத்துறை நியமனம் செய்துள்ளது.
டிச., 1 முதல் அமலுக்கு வருகிறது.அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். தற்போது அந்த நடைமுறையை மாற்றி, அரசு மருத்துவமனைகளில் பொதுச்சுகாதாரத்துறை தனியாக அலுவலர் ஒருவரை நியமனம் செய்துள்ளது.குழந்தை பிறப்பு சான்றிதழை இவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பிறந்து ஓராண்டுக்குபின்பும், பெயர் வைத்திருந்தாலும் வைக்காமல் இருந்தாலும் சான்றிதழ் பெற முடியும்.ஆனால் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியில் தான் சான்றிதழ் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment