Thursday, November 8, 2018

ஆமதாபாத் நகர் பெயர் 'கர்ணாவதி' ஆக மாற்றம்

Added : நவ 07, 2018 23:23

ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரின் பெயர், 'கர்ணாவதி' என மாற்றப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, ஆமதாபாத் நகரின் பெயரை, 'கர்ணாவதி' என மாற்றுவது குறித்து, மாநில துணை முதல்வர் நிதின் படேல் கூறியதாவது:கடந்த, 11ம் நுாற்றாண்டில், 'ஆஷ்வால்' என்றழைக்கப்பட்ட பகுதியை, 'பீல்' வம்ச ஆட்சியாளர்களுடன் போரிட்டு, சாளுக்கிய வம்சத்தினர் வெற்றி பெற்றனர். சபர்மதி ஆறு பகுதியில் அமைந்த இந்த நகருக்கு, 'கர்ணாவதி' என பெயரிட்டனர்.

பின், முகமதியர்களின் ஆட்சிக் காலத்தில், கர்ணாவதியை கைப்பற்றிய சுல்தான் அஹமது ஷா, 'அஹமதாபாத்' என, பெயர் மாற்றம் செய்தார்.மக்களின் நீண்ட கால கோரிக்கையை அடுத்து, இந்த நகரின் பெயர், கர்ணாவதி என மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரம், சமீபத்தில், 'பிரயாக் ராஜ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'பைசாபாத் மாவட்டம்அயோத்தி மாவட்டமாக மாற்றப்படும்' என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தீபாவளியன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods