Monday, February 4, 2019


இன்று தை அமாவாசை: ராமேசுவரம் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


By DIN | Published on : 04th February 2019 08:23 AM |



தை அமாவாசையொட்டி கன்னியாகுமரி, ராமேசுவரம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி வருகின்றனர்.

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் பக்தர்கள் குவிந்து அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதிலும் வருடத்தில் முக்கியமாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று பக்தர்கள் திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

அதன்படி இன்று தை அமாவாசயையொட்டி நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக கார், வேன், பஸ்களில் பக்தர்கள் ராமேசுவரத்துக்கு வந்தனர். தை அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணியளவில் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி பின்னர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டத்தால் அலை மோதியது. இதேபோல், தை அமாவாசையையொட்டி தமிழகத்தில் கடல் பகுதியில் பொதுமக்கள் புனித நீராடினர். ராமேசுவரம், குமரி, கோடியக்கரை, திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024