Thursday, February 21, 2019

நவீன O T P திருடர்கள் ஜாக்கிரதை!

நவீனகால திருடர்கள்  தெளிவு இல்லாத மக்களை
எவ்வாறு ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் அதற்கு நாம் எந்த வகையிலும் பலியாகிவிடக்கூடாது

சமீபகாலமாக பலருக்கு போன் கால் வருகிறது அதில் அரசாங்கத்தின் நல திட்டங்கள் சிலவற்றை கூறி இதில் நீங்கள் இருக்கிறீர்களா      கேட்கின்றார்கள்
அதில் உங்களை சேர்க்க உங்களுடைய ஆதார் நம்பரை கூறுங்கள் என கேட்பார்கள்

அவ்வாறு நீங்கள்  உங்களது ஆதார் கார்டு நம்பரை கூறினால் ஆக்டிவேசன் ஆக உங்கள்  மொபைலில் ஒரு O T P நம்பர் வரும் அதனை கூறுங்கள் என்று சொல்வார்கள்.

அந்த  O T P நாம் கூறிய சில நிமிடங்களில் நமது அக்கவுண்டில் இருந்து பணம் முற்றிலும் திருடப்பட்டுவிடும்

ஆகையால் எப்போதும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

மேலும் எந்த வங்கியிலும் யாரும் உங்களுக்கு போன் செய்யமாட்டார்கள்.
மேலும் உங்களிடம் ஒடிபி கேட்கமாட்டார்கள்.

அதேபோன்று எந்த அரசு அதிகாரிகளும் உங்களுக்கு போன் செய்து ஆதார் நம்பர் கேட்கமாட்டார்கள்

உங்கள் தனிப்பட்ட விவரம் கேட்டு யார் போன் செய்தாலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  அந்த நபர் மீது சந்தேகம் கொள்ளவேண்டும்.

நாம்  கொடுத்த மனுவில் தான் ஆதார்கார்டு ஜெராக்ஸ் வைத்து குடுத்தோம் என்று நினைக்கவேண்டாமா

ஒருவேளை உங்களுக்கு அதுபோல் போன்கால்கள் வந்தால் நீங்கள் இருக்கும் அட்ரஸை கூறுங்கள் நான் நேரிலேயே வந்து சமர்ப்பிக்கிறேன் என்று கூறிவிடுங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்போம்
 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024