அரசு வேலைக்கு உதவாத 50 பட்டங்கள்
Added : மே 18, 2019 19:52
சென்னை, : டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் செயலர் மற்றும் சமநிலைக் குழு நிர்வாகிகள் பங்கேற்ற, 60வது சமநிலைக் குழு கூட்டம், பிப்., 11ல் நடந்தது. இக்கூட்டத்தில், சில பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும், சில பட்டப் படிப்புகள், அரசு வேலை பெறுவதற்குரிய பட்டப்படிப்புகளுக்கு சமமாக இல்லை என்று, முடிவு செய்யப்பட்டது.இதை, அரசாணையாக வெளியிடும்படி, அரசுக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, தமிழக அரசு சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெரியார் பல்கலை வழங்கும், பி.சி.ஏ., பட்டப்படிப்பு, அரசு வேலைவாய்ப்பிற்கான, பி.எஸ்சி., கணித படிப்பிற்கு நிகரல்ல.பாரதியார் பல்கலை, திருவள்ளூவர் பல்கலை, பெரியார் பல்கலை, காமராஜர் பல்கலை வழங்கும், எம்.எஸ்சி., அப்லைடு சயின்ஸ், எம்.எஸ்சி., அப்லைடு நுண்ணுயிரியல், எம்.எஸ்சி., நுண்ணுயிரியல் பட்டப்படிப்பு, எம்.எஸ்சி., விலங்கியல் படிப்பிற்கு நிகராகாது.இதுபோல், 50க்கும் மேற்பட்ட, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், அரசு பணிக்கு தேவையான பட்டப்படிப்பிற்கு நிகராக இல்லை என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, 33 பட்டப்படிப்புகள், அரசு வேலைக்கு ஏற்றதல்ல என்று, அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment