Sunday, May 19, 2019

ஒரே நாளில் மூன்று நுழைவுத்தேர்வுகள் மாணவர்கள் குழப்பம்

Added : மே 18, 2019 23:12

மதுரை, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 'கிளாட்' உட்பட மூன்று நுழைவு தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால் குழப்பத்தில் உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர 'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு மே 25, 26ல் நடக்கிறது. அதுபோல் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மத்திய பல்கலை, சென்னை பொருளியல் கல்லுாரி, கோவை மத்திய டெக்ஸ்டைல் தொழில்நுட்ப நிறுவன படிப்புகளில் சேர 'கியூசெட்' என்ற நுழைவு தேர்வும் மே 25, 26ல் நடக்கிறது. மேலும் சட்டப் படிப்பிற்கான 'கிளாட்' என்ற நுழைவு தேர்வும் மே 26ல் நடக்கிறது.
மாணவர்கள் கூறுகையில் ''கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி என்பதால் மூன்று தேர்வுகளுக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர். 'கிளாட்' தேர்வு முன்னதாக மே 12ல் அறிவிக்கப்பட்டு தற்போது மே 26க்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தேர்வுகள் நடப்பதால் எதை எழுதுவது என்ற குழப்பமாக உள்ளது. தேர்வு தேதிகள் மாற்றியமைக்க வேண்டும்,'' என்றனர்.

No comments:

Post a Comment

BHOPAL NEWS