Tuesday, May 7, 2019

வீடுகளில் எழுதப்பட்ட பயமுறுத்தும் வாசகங்கள்

Added : மே 06, 2019 23:09

காஞ்சிபுரம் : கீழம்பி பகுதியில், தனியாக உள்ள வீடுகளில், பயமுறுத்தும் வகையில், மர்ம நபர், வாசகங்கள் எழுதி வைத்துள்ளார். இதை பார்த்து வீட்டு உரிமையாளர்கள் அச்சத்தில், போலீசில் புகார் அளித்து உள்ளனர்.காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணி, 67. அதே பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 58, இருவரும் விவசாயிகள். அவர்கள் நிலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தனியாக வீடு கட்டி விவசாயம் பார்த்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மணி என்பவர் வீட்டின் பின்புறத்தில், இரவில், மர்ம நபர், சில வாசகங்கள் எழுதியள்ளார். அதில், காலை 3 - 12 மணிக்கு என்றும், 500 மில்லி ரத்தம் என்றும் எழுதிவிட்டு சென்றுள்ளார்.மணி, பார்த்து படித்து, அச்சத்தில் உள்ளார். கொள்ளையர்கள் அவர்களுக்கு புரியும் வார்த்தையை குறிப்பிட்டிருக்கலாம் என, அவர் அஞ்சுகிறார். பாலுசெட்டிசத்திரம் போலீசார், எழுதியதைப் பார்த்து சென்றனர்.இது குறித்து, மணி கூறியதாவது:கடந்த வியாழக்கிழமை எங்கள் வீட்டின் சுவரில் இலையை வைத்து யாரோ எழுதியுள்ளார். மறு நாள்தான் நாங்கள் பார்த்தோம். அதில் புரியாத சில வார்த்தைகள் உள்ளன. அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.மன நலம் பாதிக்கப்பட்டவர் எழுத வேண்டுமானால் முன்புறத்தில் எழுதியிருக்கலாம்.

இரவில் துாங்கிய நேரத்தில் எழுதி உள்ளார்.இந்நிலையில், இதே வாசகங்கள், அருகில் உள்ள மேகநாதன் என்பவர் வீட்டின் பின்புறத்திலும், நேற்று முன்தினம் இரவு எழுதியுள்ளார். நேற்று காலையில் அவர்கள் பார்த்து என்னிடம் கூறினர்.இரு வீட்டிலும், ஒரே நபர் எழுதியிருப்பது தெரிகிறது. சிறுவர்கள் எழுத வாய்ப்பில்லை. பகலில் ஆட்கள் எப்பொழுதும் இருப்பர். தனியாக உள்ள மற்ற வீடுகளில் இது போன்று எழுதியுள்ளனரா என, பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Madras HC Justice Seshasayee retires

Madras HC Justice Seshasayee retires TNN | Jan 8, 2025, 03.58 AM IST  Chennai: A judge might possess the power of a giant, but should not ac...