Tuesday, May 7, 2019

மதுரையிலிருந்து ஷீரடிக்கு சுற்றுலா சிறப்பு ரயில்

Added : மே 07, 2019 00:45

சென்னை : ஷீரடிக்கு பக்தி சுற்றுலா சிறப்பு ரயிலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. இயக்குகிறது.இந்த ரயில் மதுரையில் இருந்து ஜூன் 3ல் புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும். 

இந்த பயணத்தில் மஹாராஷ்டிராவில் ஷீரடி பண்டரிபுரம்; ஆந்திராவில் மந்த்ராலயம் சென்று வரலாம். ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 5760 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. மையத்தை 90031 40680, 90031 40681 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Madras HC Justice Seshasayee retires

Madras HC Justice Seshasayee retires TNN | Jan 8, 2025, 03.58 AM IST  Chennai: A judge might possess the power of a giant, but should not ac...