Tuesday, May 7, 2019

மாணவருக்கு முரண்பட்ட மருத்துவச் சான்று புது முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 06, 2019 23:57

மதுரை : மருத்துவப் படிப்பில் சேர தகுதி குறித்து மாணவருக்கு அரசு இரு முரண்பட்ட சான்று அளித்துள்ளதால், புதிதாக 'மெடிக்கல் போர்டு' அமைத்து, பரிசோதித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அருண்குமார் தாக்கல் செய்த மனு: மருத்துவப் படிப்பில் சேர 2018 ல் 'நீட்' தேர்வு எழுதினேன். மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஒதுக்கீட்டின் கீழ் அரசுக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் ஒதுக்க வேண்டும் மருத்துவப் படிப்பிற்கு தகுதியற்றவர் என மதுரை அரசு மருத்துவமனையின் மாவட்ட மருத்துவக்குழு தலைவர் (மெடிக்கல் போர்டு) 2018 ஜூன் 19 எனக்கு சான்றளித்தார். அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அருண்குமார் மனு செய்தார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: மனுதாரர் 'நீட்' தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவப் படிப்பிற்கு இடம் ஒதுக்க விண்ணப்பித்துள்ளார். நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மருத்துவப் படிப்பில் சேர தகுதியற்றவர் என மதுரை மாவட்ட 'மெடிக்கல் போர்டு' சான்றளித்துள்ளது. ஆனால், மனுதாரர் மருத்துவப் படிப்பில் சேர தகுதியானவர் என சென்னை மருத்துவக் கல்லுாரி மண்டல 'மெடிக்கல் போர்டு' 2018 ஜூன் 8 ல் சான்றளித்துள்ளது.இரு முரண்பட்ட சான்றுகளை 'மெடிக்கல் போர்டு'கள் அளித்துள்ளன.

மனுதாரரிடம் புதிதாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வரும் கல்வியாண்டில் சேர, மனுதாரருக்கு தகுதிச் சான்று வழங்குவது குறித்து பரிசோதிக்க, புதிதாக 'மெடிக்கல் போர்டு'வை மருத்துவக் கல்வி இயக்குனர் அமைக்க வேண்டும். இதை 4 வாரங்களில் முடிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் 'மெடிக்கல் போர்டு' முடிவெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Madras HC Justice Seshasayee retires

Madras HC Justice Seshasayee retires TNN | Jan 8, 2025, 03.58 AM IST  Chennai: A judge might possess the power of a giant, but should not ac...