Tuesday, May 7, 2019

ரமலான் நோன்பு

Added : மே 06, 2019 23:06

சென்னை : முஸ்லிம்களுக்கான ரமலான் நோன்பு, இன்று துவங்குகிறது.முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலானில், மாதத்தின் அனைத்து நாட்களிலும், முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடிப்பர். ரமலான் மாத நோன்பு நிறைவடைந்ததும், பெருநாள் பண்டிகை கொண்டாடப்படும்.இந்த ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு, தமிழகத்தில், இன்று துவங்குகிறது.

 இது குறித்து, தமிழக அரசின் தலைமை காஜி, சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் வெளியிட்ட அறிவிப்பு:ஹிஜ்ரி, 1440, ஷாபான் மாதம், 29ம் தேதியான, மே, 5ம் தேதி மாலையில், சென்னையிலும், பிற மாவட்டங்களிலும், ரமலான் மாத பிறை காணப்படவில்லை. எனவே, மே, 7ம் தேதி, ரமலான் மாதத்தின் முதல் பிறை என, ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை தொடர்ந்து, இன்று முதல், முஸ்லிம்கள், ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...