ஐங்கரன் காபி' பெயரை பயன்படுத்த தடை
Added : மே 21, 2019 00:58
சென்னை:'கும்பகோணம் ஐங்கரன் காபி' என்ற பெயரை பயன்படுத்த, தஞ்சாவூரில் இயங்கும் உணவகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கும்பகோணம், சாரங்கபாணி கோவில் கிழக்கு தெருவில், 'ஐங்கரன் காபி' என்ற, உணவகம் இயங்குகிறது. இதன் கிளை, சென்னை, ஜாபர்கான்பேட்டையில் உள்ளது. உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர், கீழவாசல் மார்க்கெட் சாலையில், 'ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம்' உள்ளது. எங்களின் வர்த்தக குறியீடான, கும்ப கோணம் ஐங்கரன் காபி என்ற பெயரை, தஞ்சாவூரில் உள்ள உணவகம் பயன்படுத்துகிறது. எங்கள் பெயரை பயன்படுத்த, அந்த உணவகத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன், கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரை பயன்படுத்த, தஞ்சாவூரில் இயங்கும் உணவகத்துக்கு, ஜூன், ௧௧ம் தேதி வரை, இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன், ௧௧க்கு தள்ளிவைத்தார்.

No comments:
Post a Comment