Tuesday, May 21, 2019


ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'

Added : மே 21, 2019 03:49 |




சென்னை: ஓட்டு எண்ணிக்கை அன்று நிலவரத்தை ‛சுவிதா'செயலியில் பொதுமக்கள் பார்க்கலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். லோக்சபா தேர்தலையொட்டி ‛சுவிதா'எனும் அலைபேசி செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.

இதை கூகுள் ப்ளேஸ்டாரில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் அலைபேசி எண்ணை பதிவு செய்யவேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (ஓ.டி.பி) எஸ்.எம்.எஸ் வரும், அதை கொடுத்து தங்கள் பெயர் மாநிலம், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் தேர்தல் தொடர்பான விவரங்களை அறியலாம். சொந்த தொகுதி, மாநிலம் மட்டுமின்றி பிற மாநில வேட்பாளர்கள் பெறும் ஓட்டு விவரங்களையும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு சுற்றின் முடிவில் ஓட்டு விவரங்களை அறிய புக்மார்க் பகுதியை தேர்வு செய்யவேண்டும். பிறகு தாங்கள் தேர்வு செய்த மாநிலம், தொகுதியில் வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகள் விவரம் எஸ்.எம்.எஸ்.,சில் வரும். ஓட்டு எண்ணிக்கையன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு சுற்றின் ஓட்டுக்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணைய பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அவை மூலம் ‛சுவிதா' செயலிக்கு உடனுக்குடன் தகவல் பரிமாற்றப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...