மூணாறில் மீண்டும் வலம் வந்த 'படையப்பா'
Added : மே 22, 2019 23:31
மூணாறு,கேரளா மூணாறில் 'படையப்பா' என அழைக்கப்படும் ஆண் காட்டு யானை சிறிய இடைவெளிக்குப்பிறகு ரோட்டில் வலம் வருகிறது.மூணாறில் காட்டு யானைகள் பகலில் ரோடுகளில் வலம் வருவது வழக்கமாகி விட்டது. மூணாறு- -உடுமலைபேட்டை ரோட்டில் 'படையப்பா' என வனத்துறையினர் பொதுமக்களால் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை சுற்றித்திரிந்தது. சிலமாதமாக யானையின் நடமாட்டத்தைபார்க்க முடியவில்லை.தற்போது கடந்த ஒரு வாரமாக மூணாறு- -உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் முதல் கன்னிமலை எஸ்டேட் வரை இந்த யானை உலா வந்தது. நேற்று முன்தினம் மாலை எட்டாம் மைல் அருகில் ரோட்டில் வலம் வந்தது. அதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment