Friday, May 24, 2019

தினகரனை நம்பி பதவியும் போச்சு!

Added : மே 23, 2019 23:22

சென்னை, தினகரனை நம்பிச் சென்ற எம்.எல்.ஏ. க்கள் அனைவரும் பதவியை இழந்ததுடன் தேர்தலில் தோல்வியையும் தழுவி உள்ளனர். கடைசி நேரத்தில் தினகரன் கட்சியிலிருந்து விலகி தி.மு.க., வில் இணைந்த செந்தில் பாலாஜி வெற்றிபெற்றுள்ளார்.அ.தி.மு.க., விலிருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க முடிவு செய்தார். அவருக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ. க்கள் 18 பேர் ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கவர்னரிடம் மனு கொடுத்தனர்.அதைத் தொடர்ந்து 18 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்; வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல் முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க முடிவு செய்தனர். இதற்கிடையில் சென்னை ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். அதே பாணியில் தங்களையும் வெற்றி பெற வைப்பார் என பதவி இழந்த எம்.எல்.ஏ., க்கள் கருதினர்.தேர்தலுக்கு முன் தினகரனின் முக்கிய தளபதியாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க., வில் இணைந்தார்.இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மீதியுள்ளோர் தினகரன் துவக்கிய அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்டனர். அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார்; அவர் வெற்றி பெற்றார். அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட அனைவரும் படுதோல்வியை தழுவினர். தினகரனை நம்பிச் சென்ற எம்.எல்.ஏ., க்கள் தங்களின் அரசியல் வாழ்க்கையை இழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025