Wednesday, May 22, 2019

டிக்கெட் ரத்தால் ரயில்வேக்கு வருவாய் ரூ.5,366 கோடி!

Updated : மே 22, 2019 07:14 | Added : மே 22, 2019 07:13

புதுடில்லி: ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின் ரத்து செய்வதால், கிடைக்கும் அபராதத் தொகையின் மூலம் ரயில்வேக்கு ரூ.5,366 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, பின் ரத்து செய்தால், ரயில்வே அபராதத்தொகை பிடித்து வருகிறது. உதாரணமாக, படுக்கை வசதி கொண்ட இருக்கையை முன்பதிவு செய்து ரத்து செய்தால், ஒரு நபருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 3 முதல் 5 பேர் ரத்து செய்யும்பட்சத்தில், ரூ.180 முதல் ரூ.300 வரை அபராதம் வசூலிக்கப்படும். இதனால், பயணிகளுக்கு பண நஷ்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2015 - 2019 வரையிலான காலகட்டத்தில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதால், இந்திய ரயில்வேக்கு ரூ.5,366.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2017 - 18ம் நிதியாண்டில் ரூ.1,205.96 கோடி வருவாயும், கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், ரூ.1,852.50 கோடி வருவாயும் கிடைத்துள்ளன.

அதே சமயம் தென்னக ரயில்வே, 2017 - 18ல், ரூ.176.76 கோடியும், 2018 - 19ல் ரூ.182.56 கோடியும் அபராதம் மூலம் வருவாய் ஈட்டியுள்ளன. தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ம.பி.,யில் 500 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024