Tuesday, November 12, 2019

எம்பிபிஎஸ் படிப்புக்கான காலம் 54ல் இருந்து 50 மாதங்களாகக் குறைப்பு: தேர்வு முறையிலும் மாற்றம்?

By ENS | Published on : 11th November 2019 03:56 PM |

MBBS course


விஜயவாடா: எம்பிபிஎஸ் படிப்புக்கான கால அளவு மற்றும் தேர்வு முறைகளை மாற்றியமைத்துள்ளது இந்திய மருத்துவக் கவுன்சில்.

இந்த மாற்றங்கள், நடப்புக் கல்வியாண்டில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களுக்குப் பொருந்தும் என்றும், கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புக் காலம் என்பது இதுவரை 54 மாதங்களாக இருந்த நிலையில், இது இனி 50 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேப்போல தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு பாடமும் இனி இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும். அதோடு, தியரி, வாய்மொழியான தேர்வு, செய்முறைத் தேர்வு என ஒவ்வொரு தாளுக்கும் தேர்வுகள் நடைபெறும்.

இந்த தேர்வு மாற்றங்கள், கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து பயிலும் மாணவர்களை பாதிக்காது. இது குறித்து புதிய அறிக்கை அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இருந்த மருத்துவப் படிப்பில், இரண்டாம் ஆண்டில் தடயவியல் பாடம் சேர்க்கப்படும். ஆனால் புதிய மாற்றத்தில் 3ம் ஆண்டில் சேர்க்கப்படும். எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு என்பது 13 மாதங்கள், இரண்டாம் ஆண்டு என்பது 11 மாதங்களும், மூன்றாம் ஆண்டுப் படிப்பு என்பது இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டு தலா 12 மாதங்கள், 14 மாதங்கள் என தொகுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே ஒரு தேர்வு நடைபெறும். அந்த முறையில் எழுத்துத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள், வாய்மொழித் தேர்வுக்கு 20 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் மற்றும் இன்டர்நெல் அஸ்ஸெஸ்மென்ட் மதிப்பெண்களையும் கொண்டிருக்கும்.

புதிய முறையில், ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு தாள்கள் என்ற அடிப்படையில் இரண்டு தேர்வுகள் நடைபெறும். இவ்விரண்டு தேர்வுகளுக்கும் 200 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, கிளினிகல் தேர்வு என அனைத்துக்கும் 100 மதிப்பெண்களும் அளிக்கப்படும்.

ஒரு மாணவர் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு என குறைந்தது 50 மதிப்பெண்களை எடுத்தால்தான் பல்கலைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...