Friday, November 1, 2019

நவ. 16 ரயில், நவ. 29 விமானம் ராமாயண யாத்திரை துவக்கம் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம் ஏற்பாடு

Added : அக் 30, 2019 23:25

மதுரை, :இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் பாரத தரிசன சுற்றுலா ரயில் நவ., 16ல் மதுரையில் இருந்து ராமாயண யாத்திரை செல்கிறது. நவ., 29ல் சென்னையில் இருந்து இலங்கை ராமாயண யாத்திரை விமானம் புறப்படுகிறது.நவ., 16ல் மதுரையில் புறப்படும் ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழி உத்திரபிரதேசம் செல்லும். அங்கு சித்திரக்கூட நகரில் ராம்காட் நதியில் நீராடி ராமாயண கோயில்கள் செல்லலாம். கங்கையில் நீராடி ரகுநாதபுரம் பிரம்மேஸ்வரநாதர் சிவன் கோயில், நேபாள் சீதை பிறந்த இடம், ஜனக்புரி கோயில், அயோத்தி சரயு நதி, ராமஜென்ம பூமி, நந்திகிராமம், அலகாபாத் திரிவேணி சங்கமம் செல்லலாம்.இதற்கு பின் சிருங்கவெற்பூர், சீதாமார்தி தரிசனம், மகாராஷ்டிரா பஞ்சவடி சீதா குகை, கோதாவரி நதி நீராடி கர்நாடகா ஜோஸ்பேட் வரலாம். இந்த இடம் ராமனை ஹனுமன் சந்தித்த, ஹனுமன் பிறந்த, ராவணன் கவர்ந்து சென்ற போது சீதையின் அணிகலன் விழுந்த இடமாக நம்பப்படுகிறது. 13 நாள் யாத்திரைக்கு ரூ.14,720 கட்டணம். இதில் 2ம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றுலா வாகன வசதி, தங்கும் விடுதி, சுற்றுலா மேலாளர், பாதுகாவலருக்குரிய கட்டணம் அடங்கும்.நவ., 29ல் சென்னையில் புறப்படும் யாத்திரை விமானம் இலங்கை செல்லும். அங்கு கண்டி, நுவரேலியா, கதிர்காம ராமாயண நிகழ்வுகளை காண 6 நாள் பேக்கேஜ் உண்டு. ரூ.39,900 கட்டணம். இதில் விமானம், தங்கும் அறை, 'ஏசி'வாகனம், உணவு, கைடு கட்டணம் அடங்கும். மத்திய, மாநில ஊழியர்கள் எல்.டி.சி., வசதி பெறலாம். சுற்றுலா செல்ல விரும்புவோர் www.irctctourism.com இணையத்தளம், 90031 40680 அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம், என தென்மண்டல சுற்றுலா மேலாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...