விருத்தாசலம் நகரில் தீராத பிரச்சினை: தெரு நாய்களின் அட்டூழியத்தால்
மக்கள் எரிச்சல்
விருத்தாசலம்
விருத்தாசலம் நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜங்ஷனிலிருந்து, பேருந்து நிலையம் செல்லும் பயணிகளை இந்த தெரு நாய்கள் துரத்தி தாக்குகின்றன. இந்த நாய்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளை வெறித்தனத்தோடு விரட்டுவது, சிறுவர்களை கடித்துக் குதறுவது என அட்டூழியம் செய்கின்றன.
முன்பெல்லாம் மாதத்திற்கு ஒருமுறை நகராட்சிகளில் இருந்து வரும் நாய் பிடி வாகனம், வீதியில் திரிந்து கொண்டிருக்கும் நாய்களை பிடித்து, மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விடும். அதனால் நகரப் பகுதிகளில் நாய்களின் நடமாட்டம் கட்டுக்குள் இருந்தன. பிராணிகள் நல அமைப்பினரின் எதிர்ப்பால் நாய் பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டு, இதனை நிறுத்தினர். இதனால் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்தது.
இதற்கு முடிவுகட்டும் வகையில், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகை யில், நாய்களுக்கு இனப்பெருக்க கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டு, சுகாதாரத் துறை யால் நிதி ஒதுக்கப்பட்டது. சில இடங்களில் நாய் இனப்பெருக்கத்துக்கான கருத்தடை செய்யப் பட்ட போதிலும், அவையும் தற்போது கைவிடப் பட்ட நிலையில், நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, அவை குழுவாக சுற்றித் திரிந்து விருத்தாசலம் நகர மக்களை அச்சுறுத்தி வரு கிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் விருத்தாசலம் நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி விருத்தாசலம் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் குமாரிடம் கேட்டபோது, "ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய அரசு ரு.445 நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இந்த தொகை கட்டுப்படி யாகவில்லை என்று கால்நடை மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.
அவர்கள் ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூ.900 கேட்கின்றனர். நாய் பிடிப்பதற்கு ஒரு நாய்க்கு ரூ.50 கேட்கின்றனர். கருத்தடை செய்த பின் 3 தினங்களுக்கு நாயைப் பராமரித்து, அதற்குரிய உணவை வழங்கி, பிடித்த இடத்திலேயே விட வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அரசும் அதனை ஆய்வு செய்து வருகிறது'' என்றார்.
No comments:
Post a Comment