இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை
Added : ஜூலை 02, 2020 23:23
சென்னை; இளம் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டு களுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்படிப்பை முடித்து, கல்லுாரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில், நிரந்தர பதிவு சான்றிதழ் பெற, முதலில், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.அதன்பின், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞரிடம், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.கிராமப்புறங்கள் மற்றும் ஏழை குடும்பங்களில் இருந்து, சட்டம் படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்து, வழக்கறிஞர்களாக பணியாற்ற, குறைந்தது நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் தேவை.
இக்காலகட்டத்தில், பல வழக்கறிஞர்கள், மிகவும் வறுமையான நிலையில் உள்ளனர்.சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்தி கொள்ள இயலாமல், வேறு தொழிலுக்கு செல்லும் நிலை உள்ளது.எனவே, வறுமையில் வாடும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்வதற்காக, சிறப்பு திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தின் கீழ், இளம் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டு களுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment